Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை இப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்!!

#image_title

இதை இப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாம்!!

உயர் ரத்த அழுத்தம் இதய நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆபத்து. இந்த நோயே அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது.மேலும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. எனவே சிறிய பிரச்சனைகளை மனதில் வைத்து மன அழுத்தம் கொள்ள வேண்டாம். எளிய முறையில் ரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை பூசணிக்காய்
2. தயிர்
3. கொத்தமல்லி இலை
4. இஞ்சி

செய்முறை:

வெள்ளை பூசணிக்காயை தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு துருவி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு டம்ளர் தயவு செய்து கலந்து கொள்ளுங்கள். இதனை எண்ணெய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சிறிதளவு இஞ்சியை துருக்கி சேர்த்து சாப்பிட்டு வருகையில் உயர் ரத்த அழுத்தம் குறையும். அல்சர் உள்ளவர்கள் இஞ்சி சேர்க்காமல் சாப்பிடலாம்.

இதுவரை உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர் என்றால் எளிய உடற்பயிற்சியினை செய்ய முயற்சி செய்யுங்கள். தியானம், யோகா போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கலாம். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்ததைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.

தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பதும் நன்மை பயக்கும். காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகையால் இதனை தவிர்ப்பது நல்லது.

பீன்ஸ் கால்சியத்தின் மற்றொரு சிறந்த மூலமாகும். பீன்ஸ் சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் இந்த உணவு முறைகளை பயன்படுத்தி இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி பெறுங்கள்.

 

 

 

Exit mobile version