கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!!

0
91
#image_title

கம்பு தோசை சாப்பிட்டால் இத்தனை பயன்கள் உடலுக்கு கிடைக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க மக்களே!!

நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை விருப்ப உணவாக இருக்கிறது.இது நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று.அரிசியுடன் அதிக ஊட்டச்சத்து கொண்ட சிறுதானியமான கம்பை சேர்த்து அரைத்து அதில் தோசை வார்த்து சாப்பிட்டால் சுவையாகவும்,உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

*கம்பு – 400 கிராம்

*இட்லி அரிசி – 400 கிராம்

*உளுந்து பருப்பு – 200 கிராம்

*வெந்தயம் – 2 தேக்கரண்டி

*கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 400 கிராம் அளவு கம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ளவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற விடவும்.

கம்பு ஊற வைத்த இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் 400 கிராம் அளவு இட்லி அரிசி எடுத்து நன்கு கழுவிக் கொள்ளவும்.இதை ஊறிக் கொண்டிருக்கும் கம்புடன் சேர்த்து ஊற வைக்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் 200 கிராம் உளுந்து பருப்பு மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 1மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின்னர் ஊறவைத்துள்ள கம்பு + அரிசியை கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும்.கம்பு ஊறவைத்த தண்ணீரை எடுத்து தேவையான அளவு ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

பின்னர் ஊறவைத்துள்ள உளுந்து பருப்பு + வெந்தயத்தை சேர்த்து அரைக்கவும்.உளுந்து பருப்பு ஊறவைத்த தண்ணீரை எடுத்து தேவையான அளவு ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை கம்பு மாவு அரைத்து வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து அரைத்த மாவை நன்கு கலக்கவும்.இதை 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.

பின்னர் அடுப்பில் தோசைக்கல் வைத்து அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள கம்பு மாவை ஊற்றி தோசை வார்த்துக் கொள்ளவும்.தோசை வேகும் பொழுது தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை விடவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இந்த தோசைக்கு காரச் சட்னி,தேங்காய் சட்னி காமினேஷன் நன்றாக இருக்கும்.

கம்பு உண்பதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:-

*சிறுதானியா வகையைச் சேர்ந்த கம்பில் வேதிப்பொருள்களும்,வைட்டமின்களும் அதிகம் உள்ளது.இதை அடிக்கடி உணவாக எடுத்து வரும் பொழுது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்,நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

*கம்பு உணவு கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

*கம்பில் கூழ்,சாதம்,தோசை,லட்டு என்று பல வெரைட்டி செய்து சாப்பிடலாம்.இப்படி தொடர்ந்து கம்பை உணவில் சேர்த்து வந்தோம் என்றால் நீரிழிவு நோய்,குடல் புற்று நோய்,ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தப்பித்து விடலாம்.அதேபோல் இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு கம்பு சிறந்த தீர்வாக இருக்கும்.

*கம்பில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இவை செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு உரிய தீர்வாக இருக்கும்.அதேபோல் வயிற்று புண்,அல்சர் ஆகியவற்றையும் குணப்படுத்த வல்லது.

*அதேபோல் கம்பில் அடிக்கடி உணவு செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் முடி கொட்டுதல்,உடல் பருமன்,மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு ஆகியவற்றை சரி செய்யும்.

*குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் கம்பில் கூழ் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதேபோல் கம்மங்கூழ் உடல் சூட்டை தணிக்க வல்லது.