தற்போதைய உணவுப்பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமற்றவையாக மாறி வருவதால் உடலில் செரிமானப் கோளாறு,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை உள்ளிட்ட பல தொந்தரவுகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக நச்சு கழிவுகள் உடலில் தேங்கியிருந்தால் குடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டுவிடும்.அது மட்டுமின்றி நீண்ட கால மலச்சிக்கல் மூல நோய்க்கு வழிவகுத்து விடும்.எனவே அலட்சியம் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை செய்து பலனடையவும்.
மலச்சிக்கலை போக்க இயற்கை முறையில் பல தீர்வுகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் துளசி பானம்.நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகைகளில் ஒன்று துளசி.இதில்
வைட்டமின்கள்,மினரல்கள்,ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்திருக்கிறது.
துளசி பானம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
*துளசி
*தண்ணீர்
*எலுமிச்சை சாறு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு சிறிதளவு சுத்தம் செய்த துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டவும்.இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
துளசியின் நன்மைகள்:
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.தினமும் சிறிது துளசி இலைகளை நீரில் அலம்பிவிட்டு சாப்பிட்டு வரலாம்.
இன்று பலரும் எதிர்கொண்டு வரும் பிரச்சனை செரிமானக் கோளாறு.இதை சரி செய்ய துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து அருந்தலாம்.
வயிறு உப்பசம்,வயிற்றுவலி உள்ளிட்ட பாதிப்புகள் குணமாக துளசி இலையில் பானம் தயாரித்து குடிக்கலாம்.
சளி இருமல் பிரச்சனைக்கு துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.தினமும் துளசி சாறு அருந்தி வந்தால் மன அழுத்தம் நீங்கும்.