உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!
உடல் இரும்பு போன்று வலிமை பெற கருப்பு உளுந்துடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு உளுந்து
2)சுக்கு பொடி
3)தேங்காய் பால்
4)ஏலக்காய் பொடி
5)பாதாம்
6)வெந்தயம்
7)வெல்லம்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் ஒரு கேயோ கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி பொடியாக அரைத்துக் கொள்ளவும். அதேபோல 2 ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
ஒரு கப் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி வைக்கவும். இதன் பின்னர் ஊற வைத்த உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விடவும்.
பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைக்கவும். இதனை தொடர்ந்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த உளுந்து மாவு ஊற்றி சூடாக்கவும்.
பிறகு தேங்காய் பால்,சுக்கு பொடி, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். உளுந்து கஞ்சி அடிபிடிக்கும் என்பதினால் கைவிடாமல் நன்கு கிண்டவும். உளுந்து பச்சை வாடை நீங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
இந்த கஞ்சியை வாரம் ஒருமுறை செய்து குடித்து வந்தால் உங்கள் உடல் எலும்பு வலிமை பெறும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.