இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்!

0
173
If you find this item alone, you will get a prize of Rs 100000! Go ahead now!

இந்த பொருளை மட்டும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ 100000 பரிசு வழங்கப்படும்! உடனே முந்துங்கள்!

சென்னை மாநகரத்தில் சுமார்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள.இந்தியாவில் அதிகம் கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்கள் வரிசையில் டெல்லி ,மும்பைக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை சென்னை தான் பெற்றுள்ளது.

இவை குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதற்கும்,போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை  கண்டுபிடிக்க உதவுகின்றது.மேலும் கொலை ,திருட்டு ,வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் சிசிடிவி பெரும் பங்கு வகிக்கின்றது.

ஒருசில நேரங்களில் போக்குவரத்து போலீஸார்கள் தவற விடும் குற்றவாளிகள் மற்றும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட வாகனங்களை சிசிடிவி பதிவுகள் மூலம் தான் அடையாள காணப்படுகிறது.ஆனால் சிசிடிவியில் பதிவாகும் புகைப்படங்கள் தெளிவாக இல்லாததால் குற்றவாளிகை கைது செய்ய சற்று சிரமம் ஏற்படுகின்றது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சிசிடிவியில் பதிவாகும் புகைப்படங்கள் ,வாகனத்தின் பதிவு எண் போன்றவைகளை துல்லியமாக தெளிவாக அடையாளம் காணும் வகையில் மாநகர காவல்துறை பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.அதன் அடிப்படையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ‘சைபர் ஹசகத்தோன் என்ற பெயரில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து தெளிவாக காட்சி படுத்தும் புதிய மென்பொருள் உருவாக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதற்காக சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் .ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.மேலும் இந்த போட்டியில் பங்குபெற விரும்பும் நபர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பெயர் அளிக்க வேண்டும்.

அதனையடுத்து டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி தெளிவுகள் இல்லாத சிசிடிவி பதிவுகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வாகன பதிவு எண்கள் போன்றவைகளை போட்டியில் உள்ள நபர்கள் அவர்களுடைய புதிய பெண்பொருட்கள் மூலம் புகைப்படங்களை தெளிவுப்படுத்தி காட்டினாள் சம்மந்தப்பட்ட நபருக்கு ரூ 1லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.ஆகையால் விருப்பமுள்ள மென் பொறியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.