Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு இதை கொடுத்தால் நீங்கள் எடுத்த காரியம் 100% வெற்றி பெறும்!

புதிய தொழில் தொடங்கினாலும் சரி, புதிய காரியத்தில் ஈடுபட போவதாக இருந்தாலும் சரி முதலில் இவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டால் நமது காரியம் 100% வெற்றி பெறும்.

விநாயகர் மற்றும் கோமாதா வழிபாடு தான் நாம் செய்ய இருக்கின்றோம்.

விநாயகப் பெருமானுக்கும், கோமாதாவுக்கும் வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடக்கும்.

முழுமுதற் கடவுளாகிய விநாயகப் பெருமானை முதலில் வணங்கி ஆசீர்வாதம் பெற்றால் உங்களது காரியம் நினைத்தது நடைபெறும்.

புதிய தொழில் துவங்குபவர்கள் இதை செய்து விட்டு துவங்கினால் தொழில் அமோகமாக நடைபெறும். அது போல் சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்பவர்களும் நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற பிரார்த்தனையை முன்வைப்பார்கள். உங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம், திருமணம், சடங்கு, சம்பிரதாயம் என்று எந்த நல்ல விஷயம் நடந்தாலும் அதில் எந்த தடைகளும் இல்லாமல் சிறப்பாக நடக்க இந்த பரிகாரத்தை நீங்களும் தாராளமாக செய்யலாம். நிச்சயம் 100% விநாயகர் உங்களுக்கு வெற்றியைத் தருவார். நம்பிக்கையுடன் செய்து வந்தாலே போதும்.

அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைத்தால் உங்களுக்கு வர இருக்கும் தடங்கல்கள் யாவும் சிதறி விடும் என்பார்கள்.

அடுத்தது உங்கள் கண்களுக்குத் தென்படும் பசுவிற்கு அதாவது கோமாதாவிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் பொழுது அந்தப் பசு அமைதியாக அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டால் உங்களுடைய காரியம் வெற்றி தான்.

 

Exit mobile version