Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

1 ஸ்பூன் மஞ்சள் இருந்தால் 7 நாளில் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து விடும்..!!

#image_title

1 ஸ்பூன் மஞ்சள் இருந்தால் 7 நாளில் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து விடும்..!!

நம்மில் பெரும்பாலானோர் முகப்பரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடும். இந்த முகப்பருக்களை சரி செய்ய ரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதால் நாம் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடிப்பதே சிறந்தது.

முகப்பரு வரக் காரணம்:-

அதிக எண்ணெய், நெய், வெண்ணெய் உணவு, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட் உள்ளிட்டவைகளை உண்ணுதல். அதிகளவு கோழி இறைச்சி உண்ணுதல், துரித உணவு உண்ணுதல், இரசாயனம் கலந்த க்ரீமை முகத்திற்கு பயன்படுத்துதல்.

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள், 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள மஞ்சள் பேஸ்டை முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.

Exit mobile version