உங்கள் போனின் வால்யூமில் பிரச்சனையா அதை அதிகரிக்க உடனே இதை ட்ரை பண்ணுங்க!
இன்றைய உலகில் மொபைல் இல்லாதவர்கள் யாரும் இல்லை.குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு,ஆப்ஸ் யூஸுக்கு என்று ஒரு வீட்டிலேயே நான்கு ஐந்து ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றது.நேரம் போவதே தெரியாத அளவிற்கு மொபைல் மூழ்கி கிடக்கிறது இன்றைய தலைமுறை.
இவ்வாறு நம் வாழ்க்கையில் ஒன்றி போன இந்த ஸ்மார்ட் போனில் பல சமயங்களில் புதிதாக வாங்கிய போது கிடைத்த ஒலி நாளடைவில் குறைவதை பலரும் அறிந்திருப்பீர்கள்.போனில் ஒலி குறைபாட்டை உள்ளவர்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்கள்.
முதலில் உங்கள் மொபைல் செட்டிங்ஸ் சென்று Sound & Vibration என்ற மெனுவிற்கு கிளிக் செய்யுங்கள்.பிறகு அதில் Sound qality என்ற ஆப்ஷன் தோன்றும்.அதில் Dolby Atmos என்ற ஆப்ஷனை ஆட்டோ மோட்டில் செட் செய்யுங்கள்.பிறகு Adapt Sound ஆப்ஷனை ஆப் செய்து ‘over 60 years old’ என்று அமைக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் மொபைலில் ஒலி அதிகமாகும்.
உங்கள் மொபைலின் ஸ்பீக்கரில் அழுக்குகள் இருந்தால் ஒலி குறைவாக கேட்கும்.இதனால் பிரஷ் பயன்படுத்தி ஸ்பீக்கரை சுத்தம் செய்ய வேண்டும்.
அதேபோல் கூகுள் குரோமில் Fix my speaker என டைப் செய்து https://fixmyspeakers.com/ என்ற லிங்கை க்ளிக் செய்யவும்இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் போனின் வால்யூமை முழுமையாக வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் தோன்றும் நீர்த்துளி போன்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
இவ்வாறு செய்த பின்னர் மொபைலின் வால்யூமை மெல்ல குறைக்கவும்.அதன் பின்னர் மெதுவாக அதிகரிக்கவும்.இவ்வாறு செய்தால் மொபைல் ஒலி அதிகமாகும்.