உடல் செல்கள் இயங்க கொழுப்பு அவசியமான ஒன்றாகும்.ஆனால் உடலில் அதிக கொழுப்பு இருந்தால் உடல் உபாதைகளுக்கு வழிவகுத்துவிடும்.உடலில் அதிகளவு கொழுப்பு இருந்தால் அது தமனிகளில் உருவாகி இரத்த உறைவு,பக்கவாதம்,ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு உடலில் படிந்தால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரித்துவிடும்.அதிக அடர்த்தி கொண்டவை நல்ல கொழுப்பு ஆகும்.இது இதய அடைப்பு மற்றும் பக்கவாதத்தை குறைக்க உதவுகிறது.உங்கள் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை குறைத்து உடல் சீராக இயங்க இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்.
கொலஸ்ட்ராலை குறைக்க வழிகள்:
1)வெந்தயம்
50 கிராம் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி சேமித்துக் கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கப் தண்ணீரை சூடாக்கி வெந்தயப் பொடி ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கவும்.தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.
2)பூண்டு
இரண்டு பல் பூண்டை இடித்து பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
3)ஆளிவிதை
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆளிவிதை பொடி கலந்து குடித்தால் கொலஸ்ட்ரால் பிரச்சனை சரியாகும்.
4)எலுமிச்சை
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு எலுமிச்சம் பழச் சாறை பிழிந்து தேன் கலந்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.