கழுத்து பகுதியில் காணப்படும் அசிங்கமாக கருமை நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)சியா சீட்ஸ் – ஒரு தேக்கரண்டி
2)தக்காளி – மீடியம் சைஸில் ஒன்று
3)கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
4)லெமன் சாறு – ஒரு தேக்கரண்டி
5)பீட்ரூட் கிழங்கு – ஒன்று
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
**அதன் பிறகு ஒரு மீடியம் சைஸ் தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
**பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
**இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு கடலை மாவை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**அடுத்து ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
**பின்னர் மிக்சர் ஜாரை எடுத்து நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் கிழங்கு துண்டுகள் மற்றும் தக்காளி பழத் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
**பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு சியா சீட்ஸ் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை கடலை மாவு உள்ள கிண்ணத்தில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
**இந்த பேஸ்டை கழுத்தை சுற்றி நன்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காயவிட வேண்டும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி காட்டன் துணி போட்டு ஊறவைத்து கழுத்தை சுற்றி தேய்த்தெடுக்க வேண்டும்.
**இப்படி செய்தால் கழுத்து பகுதியில் உள்ள கருமை தானாக மறைந்துவிடும்.
கழுத்து கருமைக்கு மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)காபி பொடி – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
4)உருளைக்கிழங்கு சாறு – ஒரு தேக்கரண்டி
5)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி காபி பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
**பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கழுத்தை சுற்றி அப்ளை செய்ய வேண்டும்.15 முதல் 20 நிமிடங்கள் நன்றாக காயவிட்டு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு கழுத்தை சுற்றி தேய்க்க வேண்டும்.
**இப்படி செய்தால் கழுத்து பகுதியில் உள்ள கருமை சீக்கிரம் மறைந்துவிடும்.