உங்களின் சிறுவயது ஸ்நாக்ஸ் லிஸ்டில் இலந்தைப் பழம் இருந்திற்கும்.புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இலந்தைப் பழம் மட்டுமின்றி இலந்தை இலை,இலந்தை வேர் என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
1)இலந்தை இலை – ஒரு கைப்பிடி
2)மிளகு – கால் தேக்கரண்டி
3)பூண்டு பல் – நான்கு
தயாரிக்கும் முறை:
இலந்தை இலை,மிளகு,பூண்டு பல் ஆகிய மூன்றையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இலந்தை இலையை தண்ணீரில் போட்டு அலசி எடுங்கள்.அடுத்து நான்கு பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளுங்கள்.
இப்பொழுது அம்மியை கழுவி இலந்தை இலை,பூண்டு பற்கள் மற்றும் கால் தேக்கரண்டி மிளகு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளுங்கள்.
இதை தினமும் ஒரு உருண்டையாக சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)இலந்தைப் பழம் – ஒரு கப்
2)புளி – நெல்லிக்காய் அளவு
3)உப்பு – சிறிதளவு
4)வெல்லம் – ஒரு துண்டு
5)மிளகாய் வற்றல் – இரண்டு
தயாரிக்கும் முறை.
இலந்தைப் பழத்தை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு உரலில் இலந்தைப் பழத்தை போட்டு இதனுடன் புளி,உப்பு,மிளகாய் வற்றல் மற்றும் வெல்லம் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை வடை போல் தட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இந்த இலந்தை வடை ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும்.
தேவையான பொருட்கள்:
1)இலந்தை வேர் – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
தயாரிக்கும் முறை:
ஒரு கைப்பிடி இலந்தை வேரை தண்ணீரில் சுத்தம் செய்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை அரைத்து சூரணமாக தயாரித்துக் கொள்ளுங்கள்.இந்த சூரணத்தை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இரத்தப் பேதி,வயிற்றுக் கடுப்பு,பசியின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.