ரேஷன்கார்டு டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டால்..உடனே இதை செய்யுங்கள்!!

0
109
If you have lost your Ration Card Driving License..do this immediately!!

Chennai: ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் மற்றும் கல்வி ஆவணங்கள் போன்றவை மக்களுக்கு, அரசு வழங்கப்பட்ட ஒரு முக்கியமான ஆவணமாகும். இந்த முக்கியமான ஆவணங்கள் தொலைந்து விட்டால் உடனடியாக அதை யாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கீழே குறிப்பிடப்படுகிறது. டிரைவிங் லைசன்ஸ் ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுகிறது. இந்த அட்டை தொலைந்தால் மாநில போக்குவரத்து அதிகாரியை அணுகி அதற்கான ரூ.315 கட்டணத்தை வழங்க வேண்டும்.

விண்ணப்பம் செய்த பிறகு காவல்துறையில் புகார் தெரிவித்து தேவையான சான்றிதல்கள் உங்களிடம் இருந்து வாங்கிய பிறகு, மாவட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது ஆவணமாக ரேஷன் கார்டு தொலைந்தால் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள உணவுபொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர்  அலுவலகத்திற்கு சென்று காணாமல் போன விவரத்தை பற்றி கடிதம் தந்தால், விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்கு புதிய கார்டு கிடைத்துவிடும்.

மூன்றாவதாக மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் காணாமல் போனால் தலைமை ஆசிரியை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுகி, காவல் துறையிடம் காணாமல் போன பழைய சான்றிதழ்கள் “கண்டுபிடிக்க முடியவில்லை” என கடிதம் வாங்க வேண்டும். மேலும் கல்வி படித்த பள்ளி கல்லூரி நிறுவனத்திடம் விண்ணப்பம் வாங்கி அதை தாசில்தாரிடம் கொடுத்து கையொப்பம் வாங்க வேண்டும். அதை அனைத்தையும் மாவட்ட கல்வி துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

அந்த விவரங்கள் அனைத்தும் அரசிதழில் வெளியிட்டு அவர்கள் பள்ளி கல்வித் தேர்வு இயக்குனருக்கு அனுப்புவர். மேலும் தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இது குறித்த தகவல்கள் சுய தொழில் அறிவோம் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருக்கிறது. இப்போது அனைத்தும் ஆன்லைனாக இருப்பதால், ஆவணங்கள் விரைவில் கிடைத்துவிடும்.