Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!!

if-you-have-studied-10th-standard-you-are-ready-to-work-in-iit-palakkad-salary-rs-60000-per-month-apply-now

if-you-have-studied-10th-standard-you-are-ready-to-work-in-iit-palakkad-salary-rs-60000-per-month-apply-now

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாலக்காடு ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஐஐடி கல்வி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நவம்பர் 03 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: பாலக்காடு ஐஐடி(கேரளா – திருவனந்தபுரம்)

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 22

1.இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் – 09

2.ஜூனியர் சூப்பிரண்டு – 06

3.தோட்டக்கலை உதவியாளர் – 01

4.உதவி பாதுகாப்பு அதிகாரி – 01

5.மல்டி டாஸ்கிங் ஸ்டாப் – 05

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் நபர்கள் பிடெக், எம்.எஸ்.சி (மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், தோட்டக்கலை, விவசாயம், வனவியல், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதிக்கேற்ற மேல் குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய உள்ள விண்ணப்பத்தார்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரகளுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு (Written Exam)

*நேர்காணல் (Interview)

விண்ணப்பக்கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ.200 விண்ணப்பக்கட்டணம்.

எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் நபர்கள் https://joinus.iitpkd.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். பணிக்கான விண்ணப்பம் பெற https://joinus.iitpkd.ac.in/sites/staff-recruitment.iitp-portal.local/files/2023-09/c636cd72-40fc-4bee-a18b-9edbbc9ecf69.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 03-11-2023

Exit mobile version