Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

#image_title

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

இன்று வாழ்க்கையை நடத்துவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது.எதற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது.பணம் இருந்ததால் தான் மதிப்பு,மரியாதை உருவாகும் என்ற பின்பம் சமுதாயத்தில் உருவாகி விட்டது.

ஆனால் தீய எண்ணங்கள் கொண்ட நபர்களால் வாழ்வில் வளர்ச்சி,சந்தோசம் ஆகியவை தடைபட்டு கடன் பிரச்சனை,குடும்ப பிரச்சனை ஆகியவை ஏற்படும்.

வாழ்வில் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் ஆகியவை காணாமல் போக கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதம் ஒருமுறை அமாவாசை அன்று செய்து வரவும்.

இதற்கு தேவைப்படும் பொருட்கள் 11 வால் மிளகு,3 ஏலக்காய்,ஒரு கைப்பிடி கல் உப்பு,3 கிராம்பு மட்டுமே.

அமாவாசை தினத்தில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு கொட்டிக் கொள்ளவும்.

பிறகு அதில் 3 கிராம்பு,3 ஏலக்காய் மற்றும் 11 வால் மிளகு போட்டு வீட்டில் அனைவரின் கண் படும் இடத்தில் வைக்கவும்.

அமாவாசை முடிந்து அடுத்த 3 நாள் கழித்து கிண்ணத்தில் உள்ள கல் உப்பு,கிராம்பு,ஏலக்காய்,வால் மிளகு ஆகியவற்றை கால் படாத இடத்தில் கொட்டி விடவும்.இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி,பணக் கஷ்டம் ஆகியவை நீங்கும்.

Exit mobile version