இந்த ஆவணங்கள் இருந்தால்.. வீட்டில் இருந்தபடி ரேசன் அட்டையில் குழந்தைகளின் பெயரை ஈஸியாக சேர்க்கலாம்!

0
162
If you have these documents.. you can easily add children's names to the ration card at home!

இந்த ஆவணங்கள் இருந்தால்.. வீட்டில் இருந்தபடி ரேசன் அட்டையில் குழந்தைகளின் பெயரை ஈஸியாக சேர்க்கலாம்!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரேசன் அட்டை முக்கிய அடையாள ஆவணமாகும்.பொது விநியோக திட்டம் உள்ளிட்ட அரசின் பிற நல திட்டங்களில் பயன்பெற ரேசன் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

அடையாள சான்று,முகவரி சான்றாக ரேசன் அட்டை பயன்படுகிறது.ரேசன் அட்டையில் NPHH,PHH,AAY,NPHH-S குறையீடுகள் உள்ளது.இதில் AAY குறியீடு கொண்ட அட்டை தாரருக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் NPHH-S அட்டைதாரரால் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் எந்த ஒரு பொருள் மற்றும் ரேசன் அட்டை மூலம் கிடைக்க கூடிய அரசாங்கத்தின் எந்தஒரு சலுகையையும் பெற முடியாது.இப்படி பல அம்சங்கள் கொண்டிருக்கும் ரேசன் கார்டில் தங்கள் குழந்தைகளின் பெயர் சேர்க்க விரும்புபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்.

ரேசன் கார்டில் குழந்தைகளின் பெயர் சேர்க்க தேவைப்படும் ஆவணங்கள்:

1)குடும்பத்தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

2)குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

3)குழந்தையின் ஆதார் கார்டு

ரேசன் அட்டையில் குழந்தையின் பெயர் சேர்ப்பது எப்படி?

*முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற மெனு தோன்றும்.அந்த மெனுவில் உறுப்பினர் சேர்க்க என்ற ஆப்ஷன் இருக்கும்.அதை கிளிக் செய்து கொள்ளவும்.

*அடுத்து ரேசன் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை அதில் பதிவிடவும்.

*பிறகு உங்கள் செல்போனிற்கு வரும் OTP-யை என்டர் செய்யவும்.இவ்வாறு செய்த உடன் திரையில் தங்கள் ரேசன் அட்டை தோன்றும்.அதில் கடைசியாக குடும்ப உறுப்பினரை சேர்க்க என்ற ஆப்ஷன் இருக்கும்.

அதில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும்.இவ்வாறு செய்த பின்னர் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது என்று திரையில் தோன்றும்.

இந்த நடைமுறை முடிந்த 20 நாட்கள் கழித்து குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையில் உங்கள் குழந்தையின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கும்.பிறகு குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்ட ரேசன் அட்டை தபால் வழியாக தங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.