Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

#image_title

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

வாழ்வில் முன்னேற பணம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த பணத்தை நமது கடின உழைப்பாலும்.. கடவுளின் அருளாலும் பெறுகிறோம்.

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியின் அருள் இல்லையென்றால் கோடி பணமும் நிமிடத்தில் கரைந்து ஏழையாகி விடுவோம்.

லட்சமி தேவியின் மனம் குளிர அவருக்கு விருப்பமான பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் பணம், நகையின் வரவு பன்மடங்கு அதிகரிக்கும்.

மகா லட்சமி தாயாருக்கு உகந்த பொருட்கள் வீட்டில் குறைந்துவிட்டால் அதனை உடனடியாக வாங்கி வைத்துவிட வேண்டும்.

அப்படி மகா லட்சமி தாயாருக்கு உகந்த பொருளாக உள்ளது எது…

வீட்டில் கல் உப்பு நிரம்பி இருக்க வேண்டும். கல் உப்பை பிறருக்கு கடனாகவோ… நீங்கள் ஒருவரிடம் இருந்து கடனாகவோ வாங்கக் கூடாது.

பச்சை கற்பூரம், சோம்பு, பட்டை, அருகம்புல், எலுமிச்சை, அவல், கஸ்தூரி மஞ்சள், வெட்டி வேர், எள், சந்தனம், வெற்றிலை, வில்வம், துளசி, கொப்பரை தேங்காய் ஆகியவை லட்சமி தாயாருக்கு உகந்த பொருட்கள் ஆகும்.

இந்த பொருட்கள் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் லட்சமி தாயாரின் அருள் கிடைத்து பண வரவு அதிகரிக்கும்.

Exit mobile version