Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பெயிலியர் உறுதி!! சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

நம் நாட்டில் கேன்சர்,நீரிழிவு,ஹார்ட் அட்டாக் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இந்த லிஸ்டில் கிட்னி சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் இணைந்துவிட்டது.சிறுநீரக கல்,சிறுநீரக செயலிழப்பு,யூரிக் அமில அளவு
அதிகரித்தல்,சிறுநீரக பாதை தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் என்று சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.

நமது உடலில் உள்ள உறுப்புக்களின் ஆரோக்கியம் அவசியமான ஒன்றாகும்.எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் நமது உடல் ஆரோக்கியம் மொத்தமும் சிதைந்துவிடும்.சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்க
மோசமான வாழ்க்கைமுறை மற்றும் மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள்தான் காரணம்.

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கவனிக்காமல் விட்டால் நிச்சயம் பின்னாளில் பெரிய பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.உங்கள் சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சில அறிகுறிகள் தென்படுவதை கொண்டு கண்டறிந்துவிடலாம்.

சிறுநீரக ஆரோக்கியம் மோசமாக இருப்பதை காட்டும் முக்கிய அறிகுறிகள்:

1)உடலில் அதீத சோர்வு ஏற்படுதல்
2)காலை நேரத்தில் எழுந்த உடன் உடல் களைப்பு ஏற்படுதல்
3)தூக்கத்தில் இருந்து எளிதில் எழுந்திருக்க முடியாத நிலை
4)சிறுநீர் நிறத்தில் மாற்றம்
5)நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல்
6)கடும் துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுதல்
7)வயிற்று பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுதல்
8)இடுப்பு பகுதியில் வீக்கம்
9)கை,கால் வீக்கம்
10)தோல் தொடர்பான பாதிப்புகள்
11)அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் நிலை
12)சிறுநீர் வெளியேற்றும் போது வலி,எரிச்சல் உண்டாதல்

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள்:

1.காலையில் எழுந்ததும் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது இன்னும் நல்லது.

2.சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும்.உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.பாக்கட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

4.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது முக்கியம்.புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

5.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும்.

6.சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் அகல வெறும் வயிற்றில் தண்ணீர் பருக வேண்டும்.சீரகம்,புதினா,எலுமிச்சை ஆகியவற்றை கொண்டு பானம் தயாரித்து பருகினால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் முழுமையாக அகலும்.

Exit mobile version