இந்த மூன்று பொருட்கள் இருந்தால்.. சளியை வேரோடு கரைத்து தள்ளும் அற்புத மூலிகை கஷாயம் ரெடி!!

0
110
If you have these three ingredients.. a wonderful herbal decoction is ready to dissolve phlegm!

சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை கஷாயத்தை செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)கண்டங்கத்தரி வேர்
2)சுக்கு
3)கொத்தமல்லி
4)சீரகம்

செய்முறை விளக்கம்:

முதலில் 10 கிராம் கண்டங்கத்திரி வேர்,ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு,ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போடு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அரைத்த பொடியை கொட்டி குறைவான தீயில் சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்தால் சளி,இருமல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)கீழாநெல்லி
2)மிளகு

செய்முறை விளக்கம்:

சிறிதளவு கீழாநெல்லி செடி எடுத்து நீர்விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு அரைக்கவும்.அதன் பிறகு அரை தேக்கரண்டி கரு மிளகை போட்டு மைய்ய அரைக்கவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து அரைத்த கீழாநெல்லி விழுதை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி,இருமல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)கானாவழை
2)மிளகு
3)சீரகம்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு கானாவாழை இலை,10 மிளகு மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி,இருமல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)வில்வ இலை
2)சுக்கு
3)மிளகு
4)சீரகம்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு வில்வ இலை.ஒரு துண்டு தோல் நீக்கிய சுக்கு(இடித்தது),1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி,இருமல்,காய்ச்சல் முழுமையாக குணமாகும்.