இரண்டு மனைவி இருந்தால் யாருக்கு ஓய்வூதியம்?? மத்திய அரசு கொண்டு வந்த புதிய நடைமுறை!!

0
202
If you have two wives, who gets pension

Pension: இரு மனைவிகள் இருந்தால் அந்த ஓய்வூதியம் யாருக்கு என்பது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள அறிக்கை.

பொதுவாக மதி அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால் இறந்தவரின் மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்களும் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு அந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.

அதே போல் இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இதில் இரண்டு மனைவி இருந்து இரண்டு மனைவிகளும் ஓய்வூதியம் உரிமை கோரும் போது தான் பிரச்சனை உண்டாகிறது. இதுதொடர்பாக  பலவிதமான வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வெளியாகின்றன.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது மனைவியை  திருமணம் செய்ய கூடாது என திருமணச்சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்தை மத்திய அரசின் ஓய்வூதிய விதிகள் 2021 ம் ஆண்டு உறுதி செய்கிறது. இந்த நிலையில் ஓய்வூதிய துறையில் மத்திய அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இது குடும்ப ஓய்வூதிய விதிகளை மீறுவதாகும். இரண்டாம் திருமணத்தின் சட்டபூர்வ நிலை என்ன என்பது குறித்து தீர்மானிக்க பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.