Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!!

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!!

பாம்பை அடித்தாலோ அல்லது அதனை தொட்டால் கூட நாக தோஷம் உண்டாகிவிடும் என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையான கூற்று அல்ல. இதில் சிலரோ பாம்பை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கு ஜாதக ரீதியாக சர்ப்ப தோஷம் இருக்கும். சொல்லப்போனால் உங்களது முன்னோர்கள் செய்த பாவங்கள் தான் இந்த தோஷம் வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சில காரியங்களை செய்யும் பொழுது அது சர்ப்ப தோஷ மாக மாறிவிடுகிறது ஆன்மீக ரீதியாக கூறுகிறார்கள். உங்களது முன்னோர்களில் யாராவது பொறாமையால் அடுத்தவர்களின் குடும்பத்தை பிரித்து இருந்தாலும், கணவன் மனைவியை பிரித்து இருந்தாலும், செய்த வேலைக்கு கூலியை கொடுக்காமல் ஏமாற்றி இருந்தாலும், பெண்களை காதல் வயப்படுத்தி ஏமாற்றி இருந்தாலும், தேவையற்ற விஷயங்களை குறித்து வதந்தி பரப்புவது, மற்றவர் சொத்தை ஏமாற்றி வாங்குவது, பசுவை கொள்வது, இயற்கை விஷயங்களை தேவையில்லாமல் சீரழிப்பது, கோவிலின் சொத்துக்கள் மீது ஆசை கொள்வது இவ்வாறு ஏதேனும் விஷயம் செய்திருந்தால் அவர்களுடைய வருங்கால சந்ததியினருக்கு அந்தப் பாவம் வந்து சேரும்.

அதுதான் சர்ப்ப தோஷமாக ஜாதகத்தில் புலம்படுகிறது. ராகு கேது ஆகியவர்களை வணங்குவதன் மூலம் இந்த பாவத்திலிருந்து விடை பெற வாய்ப்பு உள்ளது.

Exit mobile version