Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூண்டு தோல்களை இனி குப்பையில் போடாதீங்க! இதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன! 

if-you-know-its-benefits-you-wont-throw-garlic-skin-in-the-trash-anymore

if-you-know-its-benefits-you-wont-throw-garlic-skin-in-the-trash-anymore

இதிலிருக்கும் நன்மை தெரிந்தால் பூண்டு தோலை இனி குப்பையில் போட மாட்டீர்கள்!!
பூண்டு தோல்களை நாம் எல்லாரும் தற்பொழுது வரை குப்பையில் தான் போட்டு வருகிறோம். இந்த பதிவை படித்த பின்னால் யாரும் பூண்டு தோல்களை குப்பையில் போட மாட்டீர்கள். ஆம் பூண்டு தோல் நமக்கு பலவித நன்மைகளை தருகின்றது.
பூண்டு எப்படி நமக்கு வாயுத்த தொல்லை முதல் சருமப் பிரச்சனை, உடலை குறைப்பது வரை பயன்படுகின்றதோ அதே போல பூண்டை உரித்துவிட்டு தூக்கி எரியப்படும் பூண்டு தோல்களிலும் பல சத்துக்களும் பல நன்மைகளும் அடங்கியுள்ளது.
பூண்டு தோல்களில் ஃபீனைல்ப்ரோபனாய்டு ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இவை அனைத்தும் நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. அந்த நன்மைகள் என்னவென்று தற்பொழுது பார்க்கலாம்.
பூண்டு தோல்களில் உள்ள நன்மைகள்:
* பூண்டு தோல்களில் சருமத்திற்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. பூண்டு தோல்களை வைத்து டானிக் செய்து சருமத்தில் தேய்த்தால் சருமப் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக குறையத் தொடங்கும். முகம் அரிப்பு, முகம் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு தோலை பயன்படுத்தலாம்.
* பூண்டு தோலை உணவில் சேர்த்துக் கொள்ள முடியாது. அதனால் பூண்டு தோலை ரசம், சூப் போன்று வைத்து குடிக்கலாம்.
* பூண்டு தோலை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர். இந்த தண்ணீரை வடிகட்டி இரவு தூங்கச் செல்லும் முன்பு குடித்தால் நன்றாக  தூக்கம் வரும்.
* பூண்டு தோலை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவி செய்யும்.
* தசை பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு தோலில் டீ வைத்து குடிக்கலாம். அவ்வாறு பூண்டு தோலில் டீ வைத்து குடிக்கும் பொழுது தசைப்பிடிப்பு நீங்கும்.
* பூண்டு தோல் இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துகின்றது.
* பூண்டு தோல்களை இருதய நோயாளிகள் டீ வைத்தோ அல்லது சூப் வைத்தோ அல்லது சுடுதண்ணீரில் வைத்து குடித்தால் இருதயம் வலிமை பெறும்.
* பூண்டு தோலில் டீ அல்லது சூப் செய்து குடிக்கலாம். அவ்வாறு குடித்து வரும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Exit mobile version