இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லிடுவீங்க!
1)செரிமானக் கோளாறு
ஒரு கிளாஸ் அளவு சுத்தமான மோரில் 4 தேக்கரண்டி கருவேப்பிலை சாறு சேர்த்து குடித்தால் உண்ட உணவு எளிதில் செரித்து விடும்.
2)அல்சர்
ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் அல்சர் மயமாகும்.
3)தலைவலி
ஒரு பாத்திர அளவு நீரில் சிறிது காபி பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் தலைவலி உடனடியாக நீங்கும்.
4)வயிற்று வலி
ஒரு கிளாஸ் அளவு வெந்நீரில் சிறிது சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து குடித்தால் அவை சில நிமிடங்களில் குணமாகும்.
5)உடல் பருமன்
ஒரு கிளாஸ் அளவு நீரில் 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து காய்ச்சி குடித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும்.
6)பித்தம்
சிறிது சுக்கை இடித்து தூளாக்கி எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தால் உடல் பித்தம் குறையும்.
7)பேதி
ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தயிரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும்.
8)உதிரப்போக்கு
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகளவு உதிரப்போக்கை கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் வெந்நீரில் 2 உலர் திராட்சை சேர்த்து ஊறவைத்து குடிக்க வேண்டும்.
9)சளி
ஒரு கிளாஸ் நீரில் 2 தேக்கரண்டி இஞ்சி சாறு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் நுரையீலில் தேங்கி கிடந்த சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.
10)இடுப்பு வலி
ஒரு கப் சாதம் வடித்த கஞ்சியை ஆறவிட்டு சிறிது நெய் மற்றும் சீரகம் சேர்த்து குடித்தால் எப்பேர்ப்பட்ட இடுப்பு வலியும் குணமாகும்.