Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ட்ரிக் தெரிந்தால்.. இனி யூடியூபில் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ பார்க்க முடியும்!!

If you know this trick.. Now you can watch videos on YouTube without ads!!

If you know this trick.. Now you can watch videos on YouTube without ads!!

இந்த ட்ரிக் தெரிந்தால்.. இனி யூடியூபில் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ பார்க்க முடியும்!!

நம்மில் பலருக்கு மொபைல் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது.மொபைல் மூலம் பல தகவல்களை எளிதில் ஓர் இடத்தில் இருந்தபடி தெரிந்து கொள்ள முடியும்.

தேர்விற்கு படிக்க,புதிய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள,உலக நடப்புகளை அறிந்து கொள்ள மொபைல் போன் முக்கியமான ஒன்றாக உள்ளது.இவற்றை அறிந்து கொள்ள பேஸ் புக்,வாட்ஸ்அப்,யூடியூப் போன்ற செயலிகளை தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.அவ்வாறு இருக்கையில் இந்த செயலிகளை ஓபன் செய்தாலே முதலில் தோன்றுவது விளம்பரங்கள் தான்.இதனால் பெரும்பாலானோர் அதை தவிர்க்க முடியாமல் உள்ளனர்.

சிலர் விளம்பரங்களுக்கு ஸ்கிப் ஆட் என்ற ஆப்ஷன் இருக்கிறது.ஆனால் சில விளம்பரங்களுக்கு ஸ்கிப் ஆட் என்ற ஆப்ஷன் இருப்பதில்லை.நாம் ஆர்வத்துடன் வீடியோ பார்க்கலாம் என்று நினைக்கும் பொழுது தான் இதுபோன்ற விளம்பரங்கள் தோன்றி கோபத்தை உண்டாக்கும்.

எனவே நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைதள செயலில் இதுபோன்ற விளம்பரங்கள் தோன்றாமல் இருக்க கீழ்கண்ட வழிமுறைகளை அவசியம் பின்பற்றவும்.

முதலில் SETTINGS-ஐ கிளிக் செய்து GOOGLE செயலியை டச் செய்ய வேண்டும்.பிறகு “Manage Google account” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் Data and Privacy என்ற ஆப்ஷன் தோன்றும்.அந்த ஆப்ஷனை ஸ்க்ரால் செய்தால் “:Personalized Ads” என்பது தோன்றும்.இந்த ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும் “My ad center” என்பதை கிளிக் செய்து Personalized Ads-ஐ Turn Off செய்ய வேண்டும்.பின்னர் மறுபடியும் Settings-ஐ கிளிக் செய்து Google செயலியை டச் செய்யவும்.இவ்வாறு செய்த பின்னர் Ads என்பதை கிளிக் செய்யவும்.அடுத்து அதில் தோன்றும் “Delete Advertising ID” என்பதை கிளிக் செய்து அதை நீக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் இனி உங்கள் மொபைல் போன்றிக்கு விளம்பரங்கள் வருவது தடுக்கப்படும்.

Exit mobile version