இந்த ட்ரிக் தெரிந்தால் காலையில் வடித்த சாதம் இரவு ஆனாலும் தண்ணி விடாது கெட்டுப்போகாது!!

0
88
If you know this trick, the rice cooked in the morning won't spoil at night!!
இக்காலத்தில் காலையில்  வடித்த சாதம் மதிய நேரத்திலேயே தண்ணீர் விட்டு கெட்டு போய்விடுகிறது.குறிப்பாக வெயில் காலங்களில் வடித்த சாதம் கொத கொதவென்று மாறி ஒருவித வாசனை வந்துவிடும்.
அலுமினிய பாத்திரத்தில் சாதம் செய்வதால் தான் சாதம் சீக்கிரம் கெட்டுவிடுகிறது என்று குக்கரில் சமைக்கிறார்கள்.ஆனால் குக்கர் சாதமும் இரவு நேரத்தில் ஒருவித பிசுபிசுப்புடன் மாறிவிடுகிறது.
சிலர் காலையில் செய்த சாதத்தை மூன்று வேளை உட்கொள்வார்கள்.சாதத்தில் தண்ணீர் கோர்த்தல் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும்.எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை தொடர்ந்து பின்பற்றி வந்தால் அதிகாலை நேரத்தில் வடித்த சாதம் இரவு 10 ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
1)நீங்கள் சாதம் வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் அவை கெட்டுப்போகாமல் பிரஸாக இருக்கும்.ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதுமானதாக இருக்கும்.
2)நீங்கள் பாத்திரம் அல்லது குக்கர் எதில் சாதம் வேக வைத்தாலும் அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் சாதம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
3)நீங்கள் சாதம் வடித்த உடன் ஒரு வெள்ளை காட்டன் துணியில் சாதத்தை கொட்டி அரை மணி நேரம் ஆறவிடவும்.பிறகு இதை ஹாட் பாக்ஸில் கொட்டி மூடிவிடவும்.இப்படி செய்தால் நீண்ட நேரம் சாதம் பிரஸாக இருக்கும்.
4)சாதத்தை வடித்த உடன் மூடி வைத்து விட்டால் விரைவில் தண்ணீர்விட்டு விடும்.எனவே சாதம் வடித்த பிறகு ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆறவிட்டு பிறகு ஹாட் பாக்ஸில் கொட்டி பயன்படுத்தவும்.