இது தெரிந்தால் கட்டாயம் இந்த விதையை தூக்கி எறிய மாட்டீர்கள்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

0
205
#image_title

 

இது தெரிந்தால் கட்டாயம் இந்த விதையை தூக்கி எறிய மாட்டீர்கள்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பொதுவாக நாம் முழாம் பழத்தை ஜூஸாக தயார் செய்து குடிப்போம். இதனால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றது. ஆனால் முலாம் பழத்தின் விதைகளை நாம் களைந்து விடுகிறோம். இந்த முலாம் பழத்தில் இருக்கும் பல நன்மைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு இனிமேல் முலாம் பழத்தின் விதைகளை தூக்கி எரியாமல் பயன்படுத்துங்க.

 

முலாம் பழத்தில் இருக்கும் விதைகளின் நன்மைகள்…

 

* முலாம் பழ விதைகளில் பொட்டாசியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த பொட்டாசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகின்றது. இதனால் முலாம்பழ விதைகளை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

 

* இந்த முலாம்பழ விதைகளை நாம் உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது.

 

* முலாம்பழ விதைகளை உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

 

* இந்த முலாம்பழ விதைகளை நம் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது.

 

* முலாம்பழ விதைகளில் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் சத்துக்கள் உள்ளதால் நம்முடைய கண்களுக்கு மிவும் நன்மை பயக்கும். இந்த விதைகளை தொடரந்து எடுத்துக் கொண்டால் கண்புரை நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

 

* முலாம்பழ விதைகளில் அதிக அளவில் புரதச் சத்துக்கள் உள்ளது. இந்த புரதச் சத்துக்கள் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

 

* முலாம்பழ விதைகளை நாம் தொடர்ந்து உட்கொண்டால் கூந்தல் நீளமாகவும் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 

* முலாம்பழ விதைகளை நாம் சாப்பிடும் பொழுது நகங்களுக்கு பலத்தை கொடுக்கின்றது. இதனால் நகம் உடைந்து போகமல் இருக்கும்.