இன்று பலரும் மட்டனில் குழம்பு,கிரேவி,சுக்கா,பிரியாணி போன்ற ருசியான உணவுகளை சமைத்து உட்கொள்கின்றோம்.சிக்கனை விட மட்டன் ஆரோக்கியம் நிறைந்தது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்கின்றனர்.
ஆனால் சிலர் மட்டன் கொலஸட்ராலை அதிகரித்துவிடும் என்று அஞ்சி அதை தவிர்த்துவிடுகின்றனர்.குறிப்பாக செம்மறி ஆட்டு இறைச்சியை இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் சாப்பிடவே தயங்குகின்றனர்.நம் இந்தியாவில் வெள்ளாடு,செம்மறி ஆடு என இருவகை ஆட்டிறைச்சி கிடைக்கிறது.இதில் செம்மறி ஆட்டை ஒப்பிடுகையில் வெள்ளாடு கொலஸ்ட்ரால் குறைவானது என்பதால் அதை அனைவரும் சாப்பிடுகின்றனர்.
ஆட்டிறைச்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
*இரும்புச்சத்து
*புரோட்டீன்
*வைட்டமின் பி மற்றும் ஈ
*ஜிங்க்
*பாஸ்பரஸ்
*செலினியம்
*நல்ல கொழுப்பு
மட்டன் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் இதில் குறைவான அளவே கலோரி இருக்கிறது.நாம் ஆட்டிறைச்சியை எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.சிலர் குறைவான அளவு ஆட்டிறைச்சியை எடுத்தாலும் அதிக எண்ணெய் சேர்த்து சமைப்பதால் அவை உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.
அனைவருக்கும் பிடித்த மட்டன் பிரியாணியை சரியான பக்குவத்தில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது.குறைவான அளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொண்டால் உடல் எடையில் மாற்றம் ஏற்படாது.ஆனால் டால்டா சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் அதிக காரம் சேர்த்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.சிலருக்கு மட்டன் பிரியாணியுடன் கத்தரிக்காய் தொக்கு சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.பிரியாணிக்கு கத்தரிக்காய் தொக்கு சிறந்த காமினேஷன் என்றாலும் தொக்கு செய்ய அதிகளவு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.இதனால் உடல் பருமன்,கொலஸ்ட்ரால் பிரச்சனை,இதயம் சம்மந்தபட்ட பிரச்சனை இருபவர்களுக்கு இது ஆபத்தாக மாறிவிடுகிறது.எனவே முடிந்தவரை மட்டனை சமைக்க குறைவான அளவு எண்ணெய்,நெய் பயன்படுத்துங்கள்.கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் குறைவான அளவு மட்டன் எடுத்துக் கொள்வது நல்லது.