Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது தெரிந்தால்.. இனி சாப்பாட்டு தட்டில் சின்ன வெங்காயத்தை ஒதுக்கி வைக்கமாட்டீங்க!! ஸ்மால் ஆணியனில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!!

சமையலில் பயன்படுத்தும் சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் ஏகப்பட்ட நன்மைகள் கொண்டவை ஆகும்.பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் சேர்த்த சமையல் ருசியாக இருக்கும் என்பதால் பலரும் இதை பயன்படுகின்றனர்.சமையலில் ருசியை அதிகரிக்க மட்டும் தான் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் சின்ன வெங்காயம் ஒரு மருத்துவ குணம் நிறைந்த பொருளாகும்.

சின்ன வெங்காயத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

1)புரதம் 2)நார்ச்சத்து 3)வைட்டமின் சி 4)வைட்டமின் ஏ 5)பொட்டாசியம் 6)இரும்பு 7)கால்சியம் 8)புரதம் 9)போலேட் 10)கார்போஹைட்ரேட் 11)கொழுப்புச்சத்து

மேலும் சல்பர்,பிளவனாய்டுகள்,ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

சின்ன வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

1.இருமல்,சளி போன்ற தொற்று பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2.இரத்தம் உறைதல் பிரச்சனை இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

3.நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம்.

4.இதய ஆரோக்கியம் மேம்பட சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

5.உடல் எடையை குறைக்க சின்ன வெங்காயத்தை உட்கொள்ளலாம்.சுவாசப் பாதையில் உள்ள தொற்றுக் கிருமிகள் அழிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம்.

6.சின்ன வெங்காயத்துடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் காலரா நோய் பாதிப்பு குணமாகும்.எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த சின்ன வெங்காயம் உதவுகிறது.

7.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுப்படுத்த சின்ன வெங்காயம் உட்கொள்ளலாம்.

8.பச்சை வெங்காயத்தை சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண் வலி பிரச்சனை சரியாகும்.

9.மோரில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக சின்ன வெங்காயம் உட்கொள்ளலாம்.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்க சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.

Exit mobile version