Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இது தெரிந்தால் இனி கருவேப்பிலையை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இதுல இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா?

#image_title

இது தெரிந்தால் இனி கருவேப்பிலையை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இதுல இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா?

நாம் அன்றாடம் சமையலில் வாசனைக்காகவும்,உணவின் சுவைக்காகவும் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை.இவை எந்த அளவிற்கு மணம் கொண்டிருக்கிறதோ அதை விட அதிக நன்மைகளை தன்னுள் வைத்திருக்கிறது.இந்த கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ்,நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து இருக்கிறது.

தினமும் கருவேப்பிலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்னை சரியாவதோடு,முடி அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்.இளநரை பாதிப்புக்கு கருவேப்பிலை சிறந்த தீர்வாக இருக்கும்.

*கருவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் C கல்லீரலில் தேங்கி கிடக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறி கல்லீரலை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

*தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையுடன் இரண்டு பேரிச்சை பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை விரைவில் சரியாகும்.

*கருவேப்பிலையை காய வைத்து பொடி அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலை,மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.

*சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக இருக்கும்.

*அதிக உடல் பருமன் இருந்தால் உடலில் அதிகளவு கெட்ட கொழுப்பு தேங்கி இருக்கும்.இதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி,தொப்பை குறையும்.

*இயற்கையாகவே கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை கருவேப்பிலையில் அதிகளவில் இருக்கிறது.இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து,நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் வராமல் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

*செரிமான பிரச்சனை,மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி விடும்.

Exit mobile version