இது தெரிந்தால் இனி சின்ன வெங்காயத்தை சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!

0
239
#image_title

இது தெரிந்தால் இனி சின்ன வெங்காயத்தை சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!

தென்னிந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும். காலையில் டீ, காபிக்கு பதில் சின்ன வெங்காயத்தை நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

சின்ன வெங்காயம் குளிரிச்சி நிறைந்த பொருள். இதை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.

மன அழுத்தம், உடல் சோர்வு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க சின்ன வெங்காய தேநீர் அருந்தி வரலாம். உடலில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்ற தினமும் சின்ன வெங்காயம் சாப்பிட்டு வரலாம்.

மூட்டு வலி, இடுப்பு வலியை குணமாக்க சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

சிறுநீரக தொற்றை குணப்படுத்த சின்ன வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

டெங்கு காய்ச்சலை குணமாக்க சின்ன வெங்காயம் + வெல்லம் இரண்டையும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.

நிம்மதியான தூக்கம் கிடைக்க இரவில் தூங்குவதற்கு முன்னர் ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சாப்பிடவும்.

இருமல், சளி குணமாக சின்ன வெங்காயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம்.