இது உங்களுக்கு தெரிந்தால் ஐந்தே நிமிடத்தில் பாத்ரூம் மற்றும் கிச்சன் பளபளக்கும்!!
இல்லத்தரசிகளுக்கும் சரி வெளியே சென்று வேலை செய்து வருபவர்களுக்கும் சமையலறை மற்றும் பாத்ரூமில் உள்ள அழுக்குகளை நீக்குவது என்பது சிரமமான ஒன்று. பலரின் வீட்டிலும் என்னதான் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தும் பொருட்களை வாங்கி உபயோகம் செய்தாலும் என்னை பிசுபிசுக்கோ அல்லது பாத்ரூமில் உள்ள கரையோ விடாது. இந்த பதிவில் வருவது மட்டும் உங்களுக்கு தெரிந்தால் ஐந்து நிமிடத்தில் உங்களது வீடு பளபளக்கும். முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் சிறிதளவு சோப் தூள் சேர்க்க வேண்டும். அந்த சொத்துடன் சிறிதளவு நம் பல் துலக்கும் பேஸ்ட்டை கலக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். கல் உப்பு எலுமிச்சைச்சாறு இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டும். இந்த கலவையை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனையடுத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்பு நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளலாம். சோப் தூள் சேர்ப்பதால் நீரில் ஆங்காங்கே கட்டிகள் இருக்கும். கட்டிகள் வராதவாறு அதனை தனியாக வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை ஊற்றி கிச்சன் மற்றும் கழிவறையை சுத்தம் செய்து பாருங்கள். உங்களது வீடு நறுமணத்துடன் பளபளக்கும்.