பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??

0
123

பாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??

பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி பிடித்தால் காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கொடுப்பது வழக்கம்.இந்த மஞ்சள் தூள் கலந்த பால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை விரைவில் குணப்படுத்தும் என்பதனால் தாய்மார்கள் இதனை கொடுப்பர்.ஆனால் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பாலை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் குடித்தால்,சளியை குணப்படுத்தும் தன்மை மட்டுமின்றி பல வியக்கத்தக்க நன்மைகளும் இருக்கின்றன.
வாங்க இந்த பதிவில் மஞ்சள் தூள் கலந்த பாலை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. தினமும் காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

2. மஞ்சள் தூள் கலந்த பால் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகவும்,மேலும் இதனை தினமும் குடிப்பதால் புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும் தன்மை கொண்டது.

3. மஞ்சள் கலந்த பாலில் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தியை அதிகம் உள்ளது.எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி பிடித்த காலகட்டத்தில் மஞ்சள் தூள் கலந்த பாலை குடித்தால் தீராத சளி மற்றும் இருமல் குணமாகும்.

4. தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை வலி உள்ளவர்கள் இந்த மஞ்சள் கலந்த பாலை குடித்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

5. மஞ்சள் தூள் கலந்த பால் ரத்தத்தில் உள்ள நச்சுகளை அளிக்கும் தன்மை பெற்றது.மேலும் இது ரத்த சுத்திகரிப்பானாக செயல்படுவதோடு,ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.