Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால்.. மன அழுத்தம் அப்போதே நீங்கி விடும்!!

If you mix this powder with honey and eat it.. the stress will go away!!

If you mix this powder with honey and eat it.. the stress will go away!!

இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால்.. மன அழுத்தம் அப்போதே நீங்கி விடும்!!

இன்றைய உலகில் மன அழுத்த பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் தூக்கமின்மை,மன உளைச்சல்.மன நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

வீட்டு வைத்தியம் 01:

1)வல்லாரை பொடி
2)வசம்பு பொடி
3)மஞ்சள் தூள்
4)தேன்

ஒரு கிண்ணத்தில் 20 கிராம் வல்லாரை பொடி,20 கிராம் வசம்பு பொடி மற்றும் 10 கிராம் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு அதில் 1/2 தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம்,தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

வீட்டு வைத்தியம் 02:

1)ஏலக்காய்
2)பட்டை
3)டீ தூள்
4)நாட்டு சர்க்கரை
5)துளசி இலை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடத்திற்கு சூடாக்கவும்.பிறகு இரண்டு ஏலக்காயை இடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு துண்டு பட்டை மற்றும் 1/2 தேக்கரண்டி டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை மற்றும் 15 துளசி இலைகள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் மன அழுத்தம்,தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

வீட்டு வைத்தியம் 03:

1)துளசி
2)கரு மிளகு
3)சீரகம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 15 துளசி இலைகள்,1/4 தேக்கரண்டி கரு மிளகு மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் மன அழுத்தம்,தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

வீட்டு வைத்தியம் 04:

1)பன்னீர் ரோஜா இதழ்
2)கறிவேப்பிலை
3)கொத்தமல்லி தாழை
4)துளசி
5)பனை வெல்லம்
6)சீர்கப் பொடி

முதலில் ஒரு மிக்ஸி ஜார் ஒரு பன்னீர் ரோஜாவின் இதழ்,ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தழை,ஒரு தேக்கரண்டி துளசி இலை மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு அதில் சிறிது சேர்த்து மைய்ய அரைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து அரைத்த பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பனை வெல்லத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு இதை ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

இந்த பேஸ்டை நன்கு ஆறவிட்டு சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம்,மனசோர்வு,தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.

Exit mobile version