பாலில் இதை கலந்து குடித்தால் நொடியில் தூக்கம் சொக்கி வரும்!
தற்பொழுது உள்ள கால கட்டத்தில் நிம்மதியான தூக்கத்தை பெரும்பாலானோர் அனுபவிப்பதில்லை. நிம்மதியான தூக்கம் இல்லாமல் போக முக்கிய காரணம் மன அழுத்தம். தேவையற்ற விஷயங்களை பற்றி அதிகம் கவலை கொள்வதால் தூக்கத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கவும்.
தேவையான பொருட்கள்:
பால் – 1 கிளாஸ்
அஸ்வகந்தா பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
ஜாதிக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகு – ஐந்து
பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை:
இப்பொழுது சொல்லப்படும் செய்முறை விளக்கத்தை இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் பின்பற்ற வேண்டும்.
முதலில் ஐந்து என்ற எண்ணிக்கையில் மிளகு எடுத்து உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும். உரல் இல்லாதவர்கள் மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அஸ்வகந்தா பொடி, ஜாதிக்காய் பொடி, பனங்கற்கண்டு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது 1 கிளாஸ் அளவு பால் காய்ச்ச வேண்டும். அதற்கு முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
பால் சூடானதும் அதில் இடித்த மிளகு, வாங்கி வைத்துள்ள அஸ்வகந்தா பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பிறகு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும்.
சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கவும். இவ்வாறு தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த பாலை குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.