Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தைப்பூச நாளில் இந்த ஒரு பொருளை முருகனுக்கு படைத்தால்.. வாழ்வில் வெற்றி கிடைக்கும்!!

இந்த 2025 ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் தேதி அதாவது தமிழில் தை 29 அன்று தைப்பூச நாள் கொண்டாடப்பட இருக்கிறது.பௌர்ணமி மற்றும் பூசம் ஒன்று சேர்ந்து வரும் தைப்பூசம் வருகின்ற செவ்வாய் தினத்தில் தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக பிப்ரவரி 10 அன்று மாலை 6:01க்கு தொடங்கும் தை பூசம் மறுநாள் பிப்ரவரி 11 மாலை 6:34க்கு முடிவடைகிறது.முருக வழிபாட்டிலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த தைபூச நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் வாழ்வில் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

தீவிர முருக பக்தர்கள் 48 நாட்கள் அல்லது 21 நாட்கள் விரதம் இருந்து தைப்பூச நாளில் முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வருகின்ற செவ்வாய் அன்று அதிகாலை எழுந்து தலைக்கு குளித்துவிட்டு முருகன் கோயிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

அன்று முருகனுக்கு உகந்த நெய்வேத்தியம் செய்து கொண்டு கோயிலில் படைத்துவிட்டு பிறருக்கு தானம் செய்யலாம்.அதேபோல் முருகனுக்கு உகந்த பொருட்களை தானமாக கொடுக்கலாம்.

தைப்பூச நாளில் பால் உட்கொண்டு விரதம் இருக்கலாம்.வீட்டில் முருகன் வழிபாடு மேற்கொள்பவர்கள் பூஜையில் ஒரு டம்ளர் பாலை முருகனுக்கு வைத்து வணங்கலாம்.இந்த நாளில் காலையில் விரதத்தை தொடங்குபவர்கள் மாலை நேரத்தில் பால் பழம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

வீட்டில் முருகன் சிலை இருந்தால் விரதம் இருந்து அவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.சிறப்பாக பூஜை செய்ய இயலாதவர்கள் பால் மற்றும் இனிப்பு பொருட்களை முருகனுக்கு வைத்து படைக்கலாம்.முருகன் திருவுற படத்திற்கு சிவப்பு கலர் மலர்களை அணிவிக்கலாம்.செவ்வாய் நாளில் தைப்பூசம் வருவதால் முருகன் கோயிலுக்கு சென்று நெய் தீபம் போட்டு மனதார உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.செவ்வாய் முருகனுக்கு உகந்த நாளாகும்.

திருமணத் தடை,காரியத் தடை,கடன் தொல்லை,பணப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் வாழ்வில் இருந்து விலகி முன்னேற்றம் காண தைப்பூச நாளில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுங்கள்.

Exit mobile version