நம் உடலில் ஏதேனும் ஒரு திடீர் செயல்பாடு ஏற்படும் பொழுது சுளுக்கு விழுகிறது.சுளுக்கு பிரச்சனை தசை மட்டுமின்றி எலும்பையும் சேர்த்து பாதிக்கிறது.உடல் அசைவுகள் மட்டுமின்றி கால்சியம்,பொட்டாசியம் போன்ற குறைபாடுகளாலும் சுளுக்கு ஏற்படுகிறது.சுளுக்கு மற்றும் கழுத்து வலி குணமாக இந்த மூலிகை வைத்தியத்தை செய்து பயனடையுங்கள்.
தேவையான பொருட்க்ள்:-
1)சுண்ணாம்பு – ஒரு தேக்கரண்டி
2)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் வெற்றிலை பாக்கு போட பயன்படுத்தும் சுண்ணாம்பு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு தேக்கரண்டி அளவு அமுக்கிரா கிழங்கு பொடியை போட்டு நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.
ஸ்டெப் 03:
அடுத்து இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து குறைவான தீயில் கலவையை கொதிக்க வையுங்கள்.அமுக்கிரா கிழங்கு பொடி கலவை கெட்டியாகி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
ஸ்டெப் 04:
இந்த கலவையை நன்றாக ஆறவைத்து சுளுக்கு பிடித்த இடத்தில் பூசினால் சில மணி நேரத்தில் சுளுக்கு நீங்கிவிடும்.கழுத்து வலி பிரச்சனை இருப்பவர்களும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)நொச்சி இலை – இரண்டு
2)நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் இரண்டு நொச்சி இலையை விழுது பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.
ஸ்டெப் 03:
அதன் பிறகு அரைத்த நொச்சி இலை விழுதை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இளஞ்சூடு பக்குவம் வந்ததும் எண்ணெயை சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள்.கழுத்து வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த எண்ணெயை அப்ளை செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.