ஆசனவாய் மற்றும் மலக் குடல் பகுதியில் புண்கள் மற்றும் வீக்கம் உண்டாவதை பைல்ஸ் அதாவது மூலநோய் என்கின்றோம்.மூல நோய்களில் உள் மூலம்,வெளி மூலம்,பௌத்திரம் என்று பல வகைகள் உள்ளது.இந்த மூல நோய் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
நார்ச்சத்து குறைபாடு,உடல் பருமன்,மலச்சிக்கல்,மது மற்றும் குடிப்பழக்கம்,மலம் கழிக்காமை போன்றவை பைல்ஸ் பாதிப்பு ஏற்பட காரணமாக உள்ளது.இந்த பைல்ஸ் பாதிப்பு சரியாக வாழைப்பழத்துடன் சில பொருட்களை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1)வாழைப்பழம்
2)பச்சை கற்பூரம்
பயன்படுத்தும் முறை:
ஒரு பூவன் வாழைப்பழத்தை எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.பிறகு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி அதன் நடுவில் பச்சை கற்பூரம் வைத்து மூடி சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
பச்சை கற்பூரம் குளிர்ச்சி நிறைந்த ஒரு பொருள்.இதை உட்கொள்ளும் போது ஆசனவாய் எரிச்சல் மற்றும் வலி நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)வாழைப்பழம்
2)விளக்கெண்ணெய்
பயன்படுத்தும் முறை:
ஒரு பூவன் வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறிது விளக்கெண்ணெய் அப்ளை செய்து சாப்பிட்டால் கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)உலர் அத்திப்பழம்
2)தண்ணீர்
பயன்படுத்தும் முறை:
நான்கு அல்லது ஐந்து உலர் அத்திப்பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.இதை மறுநாள் காலையில் சாப்பிடுவதால் மலச்சிக்கல்,பைல்ஸ் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)பால்
2)வாழைப்பழம்
3)தேன்
பயன்படுத்தும் முறை:
ஒரு மலை வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை அதில் போட்டு கொதிக்கவிடவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் பைல்ஸ்,மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)வெதுவெதுப்பான நீர்
2)ஆமணக்கு எண்ணெய்
பயன்படுத்தும் முறை:
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்லது மூன்று துளி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலக்கி குடிக்கவும்.இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் தேங்கிய மலக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.அது மட்டுமின்றி பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.