Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

100 மில்லி பாலில் இந்த பூ போட்டு சுண்டக் காய்ச்சி குடித்தால் ஆண்மை விருத்தி உண்டாகும்!!

ஆண்களிடையே அதிகரித்து வரும் ஒரு மோசமான பிரச்சனை ஆண்மை குறைபாடு.மோசமான உணவுப் பழக்கம்,வாழ்க்கை முறையால் விந்தணு குறைபாடு,நீர்த்த விந்து,பாலியல் ஈர்ப்பு குறைதல் போன்ற பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்கின்றனர்.முருங்கை பூ பால்,உலர் பழ பால் பருகி வந்தால் ஆண்மை விருத்தி உண்டாகும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பூ – 50 கிராம்
2)பசும் பால் – 100 மில்லி
3)நாட்டு சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

செய்முறை விளக்கம் ஒன்று:

முதலில் 50 கிராம் முருங்கை பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் இரண்டு:

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 100 மில்லி அளவு பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

செய்முறை விளக்கம் மூன்று:

பால் சிறிது சூடானதும் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை பூவை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.100 மில்லி பால் 50 மில்லியாக சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

செய்முறை விளக்கம் நான்கு:

பிறகு இந்த முருங்கை பூ பாலை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையை அதில் போட்டு கலக்கி பருகி வந்தால் ஆண்மை விருத்தியடையும்.

தேவையான பொருட்கள்:-

1)உலர் திராட்சை – ஐந்து
2)உலர் அத்திப்பழம் – ஒன்று
3)பேரிச்சம் பழம் – ஒன்று(விதை நீக்கப்பட்டது)
4)பால் – 100 மில்லி
5)தேன்

பயன்படுத்தும் முறை:

செய்முறை விளக்கம் ஒன்று:

கிண்ணம் ஒன்றை எடுத்து ஐந்து உலர் திராட்சையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் இரண்டு:

அடுத்து ஒரு உலர் அத்திப்பழம் மற்றும் ஒரு விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை போட்டு 50 மில்லி அளவு காய்ச்சாத பசும் பால் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

செய்முறை விளக்கம் மூன்று:

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இந்த ஊறவைத்த பொருட்களை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை விளக்கம் நான்கு:

அடுத்து 50 மில்லி அளவு பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

செய்முறை விளக்கம் ஐந்து:

இரண்டு நிமிடங்கள் வரை இந்த பாலை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தி உண்டாகும்.

Exit mobile version