Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!

#image_title

இதை வாயில் போட்டு மென்றால் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்..!

நெஞ்சு சளி, வறட்டு இருமல், காய்ச்சலுக்கு இயற்கை வழியில் தீர்வு இதோ…

*சித்தரத்தை

இதை பொடித்து வாயில் போட்டு சாப்பிட்டால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

*சித்தரத்தை
*தேன்

சித்தரத்தையை அரைத்து பொடியாக்கி தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், காய்ச்சல் குணமாகும்.

*சித்தரத்தை
*திப்பிலி
*அதிமதுரம்

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு சித்தரத்தை + திப்பிலி + அதிமதுரம் பொடியை சேர்த்து காய்ச்சி குடித்தால் நுரையீரல் சளி, வறட்டு இருமல், காய்ச்சல் சரியாகும்.

*சித்தரத்தை
*சுக்கு
*மிளகு

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். ஒரு கிளாஸ் அளவு நீரில் 1 ஸ்பூன் அளவு அரைத்த பொடியை சேர்த்து காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல், காய்ச்சல் குணமாகும்.

*பூண்டு
*சித்தரத்தை பொடி
*மிளகுத் தூள்
*தேன்
*பால்

ஒரு அளவு பாலில் 1/4 ஸ்பூன் சித்தரத்தை பொடி, 1 பல் இடித்த பூண்டு, 1/4 ஸ்பூன் இடித்த மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கும்.

Exit mobile version