Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!!

#image_title

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!!

நம் அனைவரும் கடவுளிடம் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும், பணம் வேண்டும், நல்ல வேலை வேண்டும், நல்ல துணை வேண்டும் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் நம் வேண்டுதலை அந்தந்த கடவுளிடம் வைத்தால் மட்டுமே அவை விரைவில் நடக்கும்.

தாங்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகா லட்சுமி மற்றும் வெங்கடாசலபதியிடம் வேண்ட வேண்டும்.

திருமணம் நடக்க, மனதிற்கு பிடித்தவர் வாழ்க்கை துணையாக கிடைக்க காமாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனை வேண்ட வேண்டும்.

எதிரிகள் தொல்லை நீங்க, பிரச்சனைகள் தீர, தடை நீங்க விநாயகரை வணங்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மற்றும் குரு பகவானை வணங்க வேண்டும்.

சனி தோஷம் நீங்க ஆஞ்சநேயர், பைரவரை வணங்க வேண்டும்.

வீடு, சொத்து வாங்க செவ்வாய் பகவானை வணங்க வேண்டும்.

பண வரவு அதிகரிக்க மகா லட்சுமி தாயாரை வணங்க வேண்டும்.

மனதளவில் பலம் பெற சிவசக்தியை வணங்க வேண்டும்.

நோய் நொடியின்றி வாழ விநாயகரை வணங்க வேண்டும்.

Exit mobile version