இன்று இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாக அல்சர் உள்ளது.உணவுமுறை பழக்கம் மற்றும் உரிய நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமை போன்ற பல காரணங்களால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது.
அல்சர் அறிகுறி:-
*வயிறு எரிச்சல்
*மலம் கழிக்கும் பொழுது எரிச்சல்
*கருப்பு கலர் மலம் வெளியேறுதல்
*வாய் துர்நாற்றம்
*நெஞ்செரிச்சல்
*வயிறு குத்தல் உணர்வு
*உடல் எடை வேகமாக குறைதல்
அல்சருக்கான காரணங்கள்:-
*காரமான உணவுகள்
*உணவு உட்கொள்ளாமை
*மது மற்றும் புகைப்பழக்கம்
*துரித உணவுகள்
அல்சரை வேரறுக்கும் மூலிகை பானங்கள்:
தேவையான பொருட்கள்:-
1)அதிமதுரம் – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் கிடைக்கும்.இவை துண்டுகளாக கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.இல்லை பொடி வடிவில் கிடைக்கிறது என்றால் வாங்கிக் கொள்ளுங்கள்.
அதிமதுரம் துண்டுகளாக வாங்கினீர்கள் என்றால் அதை சிறிளவில் எடுத்து வாயில் வைத்து சிறிது நேரம் ஊறவிடுங்கள்.பிறகு அதை மென்று சாப்பிடுங்கள்.இவ்வாறு செய்தால் அல்சர் புண்கள் சீக்கிரமாக ஆறிவிடும்.
அதேபோல் அதிமதுரம் பொடியாக கிடைத்தால் அதை ஒரு கிளாஸ் நீரில் கொட்டி கலக்கி பருகுங்கள்.மருந்து மாத்திரை எதுவும் இன்றி அல்சரை குணப்படுத்திக் கொள்ள இந்த நாட்டு வைத்தியத்தை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)கற்கண்டு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிளாஸிற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலக்குங்கள்.
அதன் பின்னர் இனிப்பு சுவைக்காக சிறிது கற்கண்டு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகுங்கள்.இந்த எலுமிச்சை பானத்தை ஒரு மாத காலம் பருகி வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை துண்டு – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
இரண்டு அல்லது மூன்று கற்றாழை துண்டுகளை தோல் நீக்கிவிட்டு முறையாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த கற்றாழை ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் வயிறு அல்சர் குணமாகும்.அதேபோல் வெந்தய பானம்,மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் அல்சர் புண்களை குணப்படுத்திவிடலாம்.