இதை படித்தால் நினைத்ததே நடக்கும்! பிரச்சனைகள் தீரும்!
அகோபிலம் கோவில் ஆந்திர மாநில கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், 108 வைணவ திவ்ய தேசங்களில் 97வது திவ்ய தேசமாகும். அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.
கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் வருமாறு:- நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை. சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே! அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே! எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே! இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே! எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல் லாம் நரசிம்மரே! நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.