Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி பிரட்டல் செய்து பாருங்கள்!! மறக்க முடியாத சுவையில் இருக்கும்!!

#image_title

சிக்கன் எடுத்தால் ஒரு முறை இப்படி பிரட்டல் செய்து பாருங்கள்!! மறக்க முடியாத சுவையில் இருக்கும்!!

மனிதர்கள் அதிகம் விரும்பி உண்ணும் அசைவங்களில் ஒன்று கோழி.இந்த கோழிக்கறி என்றால் அலாதி பிரியம் என்பவர்கள் அதில் பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கோழிக்கறி – 1/2 கிலோ

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*உப்பு – தேவையான அளவு

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*தக்காளி – 1 (சிறியது)

*சின்ன வெங்காயம் – 15

*பிரியாணி இலை – 1

*பட்டை – 1 சிறு துண்டு

*இலவங்கம் – 2

*ஏலக்காய் – 1

*கல் பாசி – 1

*கசகசா – 1/2 தேக்கரண்டி

*கறிமசால் – 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 2

*கடலை மாவு – 3 தேக்கரண்டி

*இஞ்சி – 1 துண்டு

*பூண்டு – 10 பற்கள்

செய்முறை:-

1) அடுப்பில் கடாய் வைத்து அதில் பிரியாணி இலை,பட்டை,இலவங்கம்,கசகசா,கல் பாசி,ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வறுக்கவும்.

2)ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.பின் அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3) அதே மிக்ஸி ஜாரில் கடலை சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.பின் அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

4) மீண்டும் மிக்ஸி ஜார் எடுத்து அதில் சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி,பூண்டு தனித்தனியாக போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

5)அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

6)பின்னர் வெங்காய விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

7)அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

8)இதையடுத்து இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறி விடவும்.

9)பிறகு அதில் கோழிக்கறி சேர்த்து நன்கு வத்க்கவும்.

10)வதங்கும் நேரத்தில் மஞ்சள் தூள்,கறிமசால் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.

11)பின்னர் பொடி செய்து வைத்துள்ள மசால் பொடி சேர்த்து கிளரவும்.

12)பின்னர் ஒரு பவுலில் அரைத்து வைத்துள்ள கடலை மாவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.

13)கலக்கி வைத்துள்ள கடலை மாவை வெந்து கொண்டிருக்கும் கோழிக்கறியில் சேர்க்கவும்.

14)மசாலா நன்கு வெந்து வந்ததும் அதில் வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிண்டி இறக்கவும்.

Exit mobile version