இந்திய பெண்கள் புடவை அணிந்து கொள்வதை பெருமையாக கருதுகின்றனர்.புடவை கட்டும் பெண்களுக்கு கம்பீரம்,நம்பிக்கை அதிகரிக்கிறது.இன்று இளம் தலைமுறையினர் மேற்கத்திய ஆடைகள் அணிவது அதிகரித்தாலும் சுப நிகழ்ச்சிகளில் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் புடைவை அணிவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர்.
புடைவை அணியும் போது பெண்களின் அழகு இன்னும் கூடுகிறது.ஒல்லியான பெண்கள்,பருமனான பெண்கள்,உயரமான பெண்கள்,குள்ளமான பெண்கள் யாராக இருந்தாலும் புடவை அணிந்தால் தேவதை போன்று ஜொலிப்பார்கள்.
இதில் உயரம் குறைவான பெண்கள் சேலையில் உயரமாக தெரிய சில ட்ரிக்ஸ் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உயரம் குறைவான பெண்கள் சிறிய பாடர் மற்றும் குருவான டிசைன் உள்ள புடவை அணிந்தால் உயரமாக தெரிவார்கள்.மெல்லிய மற்றும் உடை குறைவான புடைவையை அணிந்தால் உயரமாக தெரிவார்கள்.
அடர் நிற புடவைகளை அணிவதால் உயரம் அதிகரித்து காட்டும்.புடவை முந்தானை சிறிய மடிப்புகளாக இருக்க வேண்டும்.முந்தானை மடிப்பு சிறியதாக இருந்தால் உங்களை உயரமாக காட்டும்.
க்ளோஸ் நெக்,போட் நெக் போன்ற வடிவில் பிளவுஸ் அணியாமல் அகலமான கழுத்துள்ள வடிவில் பிளவுஸ் போட்டால் உங்களின் உயரத்தை அதிகரித்து காட்டும்.உயரம் குறைவான பெண்கள் புடவை கட்டும் போது நீளமான நகைகளை அணிந்தால் உயரம் அதிகமாக காண்பிக்கும்.
குண்டாக இருக்கும் பெண்கள் கருப்பு நிற புடவை அணிந்தால் ஒல்லியாக தெரிவார்கள்.உடல் பருமனான பெண்கள் அதிக எடை கொண்ட புடவை மற்றும் காட்டன் புடவைகளை தவிர்த்து மெல்லிய மற்றும் எடை குறைவான புடவை அணிந்தால் தேகம் ஒல்லியாக காட்சியளிக்கும்.
புடவை மற்றும் ரவிக்கை வெவ்வேறு நிறமாக இல்லாமல் ஒரே நிறத்தில் இருந்தால் உங்களை உயரமாக காண்பிக்கும்.