Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2 கிராம்பை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் எலி தொல்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை!!

மண் வீடு மட்டுமின்றி ஓட்டு வீடு மாடி வீட்டிலும் எலி நடமாட்டத்தை காண முடிகிறது.இந்த எலிகளை விரட்ட மருந்து,ஸ்ப்ரே,எலிப் பொறி என்று என்னென்னவோ இருந்தாலும் அவற்றின் நடமாட்டத்தை மட்டும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.உருவத்தில் சிறியதாக இருக்கும் எலிகள் செய்யும் சேட்டைகள் ஏராளம்.

உணவுப் பொருட்களை சேதப்படுத்தவது,காகிதங்களை கடிப்பது என்று அதன் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று பலரும் துடிக்கின்றனர்.

கடைகளில் விற்கப்பட்டு வரும் பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு எலிகளை எளிதில் ஓடவிடலாம்.

எலிகளை விரட்ட கிராம்பு பயன்படுத்துவது சிறந்த யோசனையாக இருக்கும்.கிராம்பை பொடித்து ஸ்ப்ரே போன்று வீடுகளில் பயன்படுத்துவதால் எலி நடமாட்டம் கட்டுப்படும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கிராம்பு – 25 கிராம்
2)எலுமிச்சம் பழம் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் கிராம்பை ஒரு கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் கிராம்பு பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலக்கி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்ற வேண்டும்.இந்த கிராம்பு ஸ்ப்ரேவை வீட்டு முழுவதும் தெளித்தால் எலிகள் ஓட்டம் பிடித்துவிடும்.

கிராம்பில் இருந்து வீசும் வாசனை எலிகளுக்கு பிடிக்காது.ஆகவே இந்த கிராம்வை கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரேவை எலிகளை விரட்ட பயன்படுத்தலாம்.

Exit mobile version