நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்த நிலை அல்லது நின்ற நிலையில் இருந்தால் நரம்பு சுருட்டல் பிரச்சனை ஏற்படும்.கால் நரம்புகளில் முடிச்சி விழுதலை தான் நரம்பு சுருட்டல் அதாவது வெரிகோஸ் வெயின் என்கிறோம்.
இந்த நரம்பு சுருட்டல் பாதிப்பை ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகம் சந்தித்து வருகின்றனர்.இந்த நரம்பு சுருட்டல் பாதிப்பை இயற்கை முறையில் எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
இயற்கை மருத்துவத்தில் நரம்பு சுருட்டல் குணமாக மண் சிகிச்சை அளிக்கப்படுகிறது.எறும்பு புற்றுமண் அல்லது மாசுபடாத மண்ணை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளவும்.இதை நரம்பு சுருண்ட பகுதியில் தடவி நன்கு காயவிட வேண்டும்.பிறகு வெது வெதுப்பான நீர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
நரம்பு சுருட்டலால் வலி,வீக்கத்தால் அவதியடைந்து வருபவர்கள் தினமும் இந்த சிகிச்சையை செய்து வந்தால் பாதிப்பு விரைவில் நீங்கும்.அதேபோல் நரம்பு சுருண்ட பகுதியில் தினமும் 15 நிமிடங்களுக்கு ஆயில் மசாஜ் செய்து வர வேண்டும்.
இந்நோய் பாதிப்பு குணமாகும் வரை இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வது,நிற்க்காமல் சுறுசுறுப்பாக இயங்கினால் நரம்பு சுருட்டல் விரைவில் சரியாகும்.
மஞ்சள்,கருந்துளசி,வசம்பு துண்டு,கற்றாழை ஜெல் ஆகியவற்றை சம அளவு எடுத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை நரம்பு சுருண்ட பகுதியில் அப்ளை செய்து கட்டு போடவும்.இப்படி செய்வதால் நரம்பு பிடிப்பு வலி நீங்கி மெல்ல மெல்ல நரம்பு சுருட்டல் சரியாகும்.