ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!
நம்மில் பெரும்பாலானோர் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும்.
ஆஸ்துமா ஏற்படக் காரணம்:-
*வறட்டு இருமல்
*தீராத சளி
*பரம்பரை நோய்
ஆஸ்துமா பாதிப்புக்கு எளிய தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*ஆடாதோடை இலை
*தேன்
செய்முறை:-
அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துள்ள 2 ஆடாதோடை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் போடவும்.
ஒரு கிளாஸ் நீர் சுண்டி 1/2 கிளாஸ் என்று வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். அடுத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். ஆடாதோடை கசப்பு தன்மை கொண்ட இலை என்பதால் இதில் தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் ஆஸ்துமா பாதிப்பு விரைவில் சரியாகும்.
மற்றொரு தீர்வு:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும்.மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து 2 பல் பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதை ஒரு உரலில் போட்டு இடித்துக் வடிகட்டி வைத்துள்ள பாலில் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் 1/4 தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் ஆஸ்துமா பாதிப்பு விரைவில் சரியாகும்.