பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தினால் உங்கள் கழுத்து பகுதியில் படிந்த கருமை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
82
#image_title

பேக்கிங் சோடாவை இப்படி பயன்படுத்தினால் உங்கள் கழுத்து பகுதியில் படிந்த கருமை முழுமையாக நீங்கி விடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நம்மில் பெரும்பாலானோருக்கு கழுத்து பகுதியில் அடர் கருமை படிந்திருக்கும். கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்படுவது தான். இவை நம் அழகை குறைத்து காட்டிவிடும். இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாள்பட்ட கழுத்து கருமை நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*பேக்கிங் சோடா – 2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 2 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை அதில் ஊற்றி கலந்து விடவும்.

இதன் பின் சுத்தமான தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி அளவு ஊற்றி நன்கு கலந்து விடவும். இப்படி செய்தால் கழுத்து கருமை நீங்குவதற்கான பேஸ்ட் தயாராகி விடும்.

அடுத்து கழுத்தை சுற்றி ஒரு ஈரமான காட்டன் துணி கொண்டு நன்கு துடைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை கழுத்து பகுதி முழுவதும் அப்ளை செய்து நன்கு மஜாஜ் செய்து கொள்ளவும். ஒரு ஸ்க்கர்ப்பர் இருந்தால் அதை பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யவும்.

பின்னர் 15 நிமிடம் கலந்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுத்து பகுதியை செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நாள்பட்ட கழுத்து கருமை நீங்கி கழுத்து அழகாக காட்சியளிக்கும்.