கடுகை இப்படி பயன்படுத்தினால்.. வீட்டில் காக்ரோச் தொல்லையே இருக்காது!! உடனே செய்து பாருங்கள்!!
வீட்டில் கரப்பான் பூச்சி,பல்லி,எலி போன்றவற்றின் நடமாட்டம் அதிகரித்தால் சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.குழந்தைகள் உள்ள வீட்டில் இதுபோன்ற பூச்சி தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் பெருமபாலானோர் சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து காணப்படுகிறது.இரசாயனம் நிறைந்த ஸ்ப்ரேக்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காணலாம்.
இந்த கரப்பான் பூச்சி நடமாட்டத்திற்கு முடிவுகட்ட கடுகுடன் சில பொருட்களை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
கடுகு – இரண்டு தேக்கரண்டி
பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
வாஷிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
அலுமினியம் பாயில் பேப்பர் – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு தேக்கரண்டி அல்லது தங்களுக்கு தேவையான அளவு கடுகை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அடுத்து ஒரு கிண்ணத்தில் கடுகுத் தூளை கொட்டி பேக்கிங் சோடா ஒரு தேக்கரண்டி,வாஷிங் பவுடர் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.அடுத்து அலுமியம் பாயில் பேப்பர் ஒன்றை எடுத்து கடுகு கலவையை அதில் கொட்டி ஒரு பொட்டணம் போல் செய்து கொள்ளவும்.
பிறகு அலுமியம் பாயில் பேப்பரில் சிறு சிறு துளைகள் போட்டு கரப்பான் பூச்சி மற்றும் பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் வைக்கவும்.இந்த கலவையின் வாசனைக்கு பில்லி,கரப்பான் பூச்சியின் தொல்லை இனி ஏற்படாது.
சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.ஜிங்கிள் உள்ள அழுக்குகளை அவவ்போது நீக்கிவிடுங்கள்.இதையெல்லாம் செய்து வந்தால் கரப்பான் பூச்சி நடமாட்டம் கட்டுப்படும்.