Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே ஒரு தக்காளியை இப்படி யூஸ் பண்ணினால்.. வழுக்கை தலையில் பேபி ஹேர் முளைக்கும்!!

தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காவிட்டால் சீக்கிரம் முடி உதிர்ந்து வழுக்கையாகிவிடும்.இன்று இளம் வயதினர் பலர் வழுக்கை தலையுடன் இருக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்த வழுக்கை தலையில் புதிய முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி பழம் – ஒன்று
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு மீடியம் சைஸ் தக்காளி பழத்தை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அடுத்து இந்த தக்காளி ஜூஸை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு பில்டர் செய்து தலையில் ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

4.அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒன்று
2)வெங்காய சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

3.அடுத்து இந்த இரண்டு பொருட்களையும் மிக்சர் ஜாரில் போட்டு தனி தனியாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

4.பிறகு இந்த சாறை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

5.பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் வழுக்கை தலையில் முடி முளைக்க தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தக்காளி – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.நன்கு பழுத்த தக்காளி பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.இதை ஒரு வடித்து தலை முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீர் கொண்டு தலை முடியை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை வாரம் இருமுறை செய்து வந்தால் தலையில் வழுக்கையான இடத்தில் புதிய முடி வளரும்.

Exit mobile version