உப்பை இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட கால் வலியும் காணமல் போகும்!!

0
75
If you use salt in this way, any leg pain will disappear!!

வயதானவர்கள் அதிகமானோர் சந்திக்கும் கால் வலிக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கை மருந்து பயன்படுத்தவும்.

தீர்வு 01:

எப்சம் உப்பு

ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி எப்சம் உப்பு சிறிதளவு கலந்து விடுங்கள்.பிறகு கால்களை அந்த நீரில் வைத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.

தண்ணீரில் கால்களை ஊற வைக்கும் போது சிறிது நேரம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் கால் வலி சீக்கிரம் குணமாகிவிடும்.

தீர்வு 02;

ஆப்பிள் சீடர் வினிகர்
தேன்

ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து பருகுங்கள்.இவ்வாறு தினமும் ஒரு கிளாஸ் குடிப்பதால் கால் வலிக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

தீர்வு 03:

மஞ்சள் தூள்
நல்லெண்ணெய்

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பேஸ்டாக்கி இளஞ்சூட்டில் இருக்கும் பொழுது கால் வலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும்.

தீர்வு 04:

பூண்டு பற்கள்

தினமும் இரண்டு பூண்டு பற்களை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால் கால் வலி முழுமையாக குறையும்.

தீர்வு 05:

இஞ்சி
தேன்

ஒரு சிறிய அளவு இஞ்சியை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் கால் வலி முழுமையாக குணமாகும்.